இனி பாகிஸ்தான் அணி அவ்வளவுதான்.. ஆசிய கோப்பையில் இருக்காது... கலைத்துவிடுவோம்.... கவாஸ்கர் அதிரடி
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்பட்டு ஒரு மாற்று கிரிக்கெட் தொடர் நடத்தப்படலாம் என்பதுடன், அடுத்த இரண்டு மாதங்களில் என்னென்ன நடக்கும் என்பதைப் பொறுத்தே இது அமையும்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் இந்திய அரசு பல்வேறு உறவுகளை முடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி நீக்கப்படும் அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்படும் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் சேர்ந்து அடுத்து சில மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
ஆனால், தற்போது பாகிஸ்தானுடன் இந்தியா எந்தவிதமான உறவும் வைத்துக்கொள்ள விரும்பாத நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பையில் விளையாடுமா என்பது சந்தேகமே.
இந்த விவகாரத்தில் பிசிசிஐ என்ன செய்யும் என்பது தொடர்பில் சுனில் கவாஸ்கர் தெரிவிக்கையில், "இந்திய அரசு என்ன சொல்கிறதோ அந்த முடிவைத்தான் 'பிசிசிஐ எடுக்கும். ஆசியக் கோப்பை விவகாரத்திலும் வேறு எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படாது என நான் நினைக்கிறேன். ” என்று கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தலாம் என்றும், சூழ்நிலையைப் பொறுத்து இது மாறலாம் என்பதால், இப்போதைக்கு எந்த மாற்றமும் நடக்கவில்லை என்றும் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் இடம்பெறாது என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது எப்படி நடத்தப்படும் என தனக்குத் தெரியவில்லை என்றும், சிலவேளைகளில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்குப் பதிலாக, மூன்று நாடுகளின் சுற்றுப் பயணமாக மாறவும் வாய்ப்பு உள்ளதுடன், மூன்று அல்லது நான்கு நாடுகள் இணைந்து ஆசிய கோப்பைக்கு மாற்றாக விளையாடலாம என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்பட்டு இதுபோன்ற ஒரு மாற்று கிரிக்கெட் தொடர் நடத்தப்படலாம் என்பதுடன், அடுத்த இரண்டு மாதங்களில் என்னென்ன நடக்கும் என்பதைப் பொறுத்தே இது அமையும் என்றும் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்தும் இந்தியா விலகலாம் என்றும், இது நான்கு நாடுகள் அல்லது ஐந்து நாடுகள் பங்கேற்கும் தொடராக வங்கதேசம், இலங்கை அல்லது ஆப்கானிஸ்தானில் நடைபெறலாம் என்றும், இந்தியா இந்தத் தொடரை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்கிறது என்பதால், இந்தியாவில் தான் இந்தத் தொடர் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இரண்டு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொண்டால், அந்தச் சூழ்நிலைகள் கடினமாகவே இருக்கும் என்பதால், அந்த இரண்டு நாடுகளும் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட முடியாது என்கிறார் கவாஸ்கர்.