மொத்த ஆட்டத்தையும் மாற்றிய முதல் 6 ஓவர்கள்... இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே.... சூர்யகுமார்!

தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 முதல் 6 ஓவர்கள் வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

Dec 13, 2023 - 14:00
Dec 13, 2023 - 14:21
மொத்த ஆட்டத்தையும் மாற்றிய முதல் 6 ஓவர்கள்... இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே.... சூர்யகுமார்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால், இந்திய அணியின் பேட்டிங் நிறைவுக்கு வந்தது. 

பின்னர், டிஎல்எஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. 

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை. சராசரிக்கும் அதிகமான ஸ்கோரை தான் பதிவு செய்துள்ளோம். 

ஆனால் தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 முதல் 6 ஓவர்கள் வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதுபோன்ற ஒரு கிரிக்கெட்டை தான் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று பேசி வருகிறோம். அதேபோல் இந்த சூழலில் பவுலிங் செய்வதே கொஞ்சம் கடினமான ஒன்றாகும்.

வெற்றி, தோல்வியை கடந்து இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மைதானத்தில் என்ன நடந்தாலும் அதனை மைதானத்திலேயே விட்டுவிட வேண்டும். நிச்சயம் 3வது டி20 போட்டியில் விளையாட ஆவலுடன் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!