இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்? அதுக்கு சரிபட்டு வருவாரா?

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக  இளம் வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் சரிபட்டு வர மாட்டார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்? அதுக்கு சரிபட்டு வருவாரா?

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக  இளம் வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் சரிபட்டு வர மாட்டார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுப்மன் கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், வெளிநாட்டு மண்ணில் ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டுமே சிறப்பாக விளையாடி உள்ளார்.

எனினும், ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையில் குஜராத் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வி உட்பட 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 

இன்னும் ஒரு போட்டியில் வென்றால் குஜராத் அணியால்  பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும் என்பதுடன்,  கேப்டன் பதவி அளிக்கப்பட்டாலும், சுப்மன் கில்லின் பேட்டிங்கில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சுப்மன் கில் 5 அரைசதங்கள் உட்பட 465 ரன்களை விளாசி உள்ளதுடன், முன்னதாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். 

இந்த நிலையில், ஐபிஎல் தொடரிலும் சுப்மன் கில் சாதித்து வருவதால், அவருக்கு இந்திய டெஸ்ட் கேப்டன்சியை அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ரோஹித் சர்மாவுக்கு 38 வயதாகிவிட்டதால், அவரை மீண்டும் கேப்டனாக அழைத்து செல்ல பிசிசிஐ விரும்பவில்லை.

அத்துடன், பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், இளம் வீரர் ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அத்துடன், விராட் கோலியை போன்ற சீனியர் வீரரை நியமனம் செய்வதை விடவும், இளம் வீரர்களை தயார் செய்வதிலேயே பிசிசிஐ விருப்பம் காட்டி வருகிறது. 

இளம் வீரர்களில் சுப்மன் கில் மட்டுமே 32 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார். ஆனால் இதுவரை ஒரு இன்னிங்ஸை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தடுமாறி வருகிறார். 

ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 20 ரன்களுக்கு மேல் எடுத்துவிடும் சுப்மன் கில், எந்த நேரத்தில் ஆட்டமிழப்பார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதேபோல் சுப்மன் கில் இதுநாள் வரை இந்திய மண்ணில் மட்டுமே நன்றாக விளையாடி வருகிறார். 

வெளிநாட்டு மைதானங்களில் சுப்மன் கில் அறிமுக டெஸ்ட் தொடரில் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். நம்பர் 3ல் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று கேட்டு வாங்கிய சுப்மன் கில், இதுவரை அதனை செய்யவே இல்லை.

ஆஸ்திரேலியா, டெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை என்று எங்குமே சுப்மன் கில் ரன்களை சேர்க்காத நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் துணைக் கேப்டனாக கூட இந்திய அணியை ஒருமுறை கூட வழிநடத்தியதில்லை. 

இதனால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சிக்கு சுப்மன் கில் சரிபட்டு வரமாட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.