148 வருடத்தில் முதல்முறை... ராகுல் படைத்த விநோத சாதனை... டெஸ்டில் நடந்த அதிசயம்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் அகமாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் ஒரு விநோத சாதனையை படைத்து உள்ளார்.

148 வருடத்தில் முதல்முறை... ராகுல் படைத்த விநோத சாதனை... டெஸ்டில் நடந்த அதிசயம்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் அகமாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் ஒரு விநோத சாதனையை படைத்து உள்ளார்.

முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி, 197 பந்துகளில் 12 பவுண்டரி உட்பட 100 ரன்களை அடித்து, ஒரு வருடத்தில், இரண்டு முறை சரியாக 100 ரன்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற விநோதமான சாதனையை படைத்து இருக்கிறார்.

முன்னதாக, கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், சரியாக 100 ரன்களை எடுத்து கே.எல்.ராகுல் அவுட் ஆனார். 

டெஸ்ட் கிரிக்கெட்டை, 1877ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் நிலையில், இதுவரை எந்த பேட்டரும், ஒரு வருடத்தில் இரண்டு முறை, சரியாக 100 ரன்களை எடுத்து அவுட் ஆனதே கிடையாது.

அத்துடன், டெஸ்டில், இதுவரை 7 வீரர்கள், இரண்டு முறை சரியாக 100 ரன்களில் அவுட் ஆகியிருக்கிறார்கள். ஆனால், இதில் 6 பேர், ஒரு வருடத்தில் இரண்டு முறை இப்படி அவுட் ஆனது கிடையாது.

முன்பு கே.எல்.ராகுல் கேப்டனாக அல்லது துணைக் கேப்டனாக இருப்பார். ஆனால், அண்மை காலமாகவே கேப்டன்ஸியே வேண்டாம் என்ற முடிவில் ராகுல் இருக்கிறார். 

கடந்த ஐபிஎல் 18ஆவது சீசனில் கூட, டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்பு இருந்தும், அக்சர் படேலிடம் அதனை விட்டுக்கொடுத்தார். அப்போது, எந்த அழுத்தங்களும் இல்லாமல் அபாரமாக செயல்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 10 இன்னிங்ஸ்களில் 53.20 சராசரியில் 2 சதம், 2 அரை சதம் உட்பட 532 ரன்களை குவித்து அசத்தினார். 

கே.எல்.ராகுல் கடைசியாக 2016ஆம் ஆண்டில் உள்நாட்டு டெஸ்டில் சதம் அடித்திருந்த நிலையில், தற்போது, சதம் அடித்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியினர் தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் செய்து வருவதுடன், முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 162/10 ரன்களை எடுத்தது.

அடுத்துக் களமிறங்கியுள்ள இந்திய அணி 448/5 ரன்களை எடுத்து, 286 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததுடன், கே.எல்.ராகுல் (100), துரூவ் ஜோரல் (125), ரவீந்திர ஜடேஜா (104) ஆகியோர் சதம் அடித்துள்ளனர். 

கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி, 286 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டதால், கிட்டதட்ட இன்னிங்ஸ் வெற்றி உறுதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. இன்று, இந்திய அணியினர் 550+ ரன்களை அடித்து டிக்ளேர் அறிவிக்க வாய்ப்புள்ளது.