திடீரென்று இந்திய அணியிலிருந்து விலகிய கோலி.. இதுதான் காரணமா? நடந்தது என்ன?
ஹைதராபாத்துக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு கூட செல்லவில்லை. இந்த நிலையில் திடீரென்று இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றுக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும் என்பதால் இந்தப் போட்டி விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்களுக்கு மிக முக்கிய தொடராகும்.
ஹைதராபாத்துக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு கூட செல்லவில்லை. இந்த நிலையில் திடீரென்று இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார்.
சில தனிப்பட்ட காரணங்களால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதில் தமது முழு கவனமும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக விராட் கோலி கூறியுள்ளார்.
இந்த நிலையில், விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக தான் விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், பிரசவம் தான் காரணமா இல்லை விராட் கோலிக்கு வேறு ஏதேனும் பிரச்சினையா என்று ரசிகர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் குறித்து ரசிகர்களும் ஊடகங்களும் அமைதி காக்க வேண்டும் என, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |