விராட் கோலி இல்லை... ஷாக் கொடுத்த ராகுல் டிராவிட்.. காரணம் என்ன தெரியுமா?
14 மாதங்களுக்கு பின் மீண்டும் டி20 கிரிக்கெட் விளையாட விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறி உள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதம் விளாசி இரண்டரை ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.
இந்த நிலையில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவுள்ளது.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் விராட் கோலி டி20 கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை.
14 மாதங்களுக்கு பின் மீண்டும் டி20 கிரிக்கெட் விளையாட விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மொஹாலியில் நடக்கவுள்ள முதல் டி20 போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ராகுல் டிராவிட் பேசுகையில், சொந்த காரணங்களால் விராட் கோலி இந்திய அணியுடன் மொஹாலிக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.
முதல் ஆட்டத்தில் விராட் கோலி விளையாட மாட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்காளாக களமிறங்குவார்கள்.
ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா களமிறங்குவதால், இந்திய அணிக்கு இடது - வலது காம்பினேஷனில் களமிறங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
திடீரென விராட் கோலி முதல் போட்டியில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |