இந்தியாகிட்ட தோத்துட்டோம் ஆனா மறுபடியும்... அதன நெனச்சா.. தென்னாப்பிரிக்க கேப்டன் ஓபன் டாக்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 

இந்தியாகிட்ட தோத்துட்டோம் ஆனா மறுபடியும்... அதன நெனச்சா.. தென்னாப்பிரிக்க கேப்டன் ஓபன் டாக்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 

அதனால் இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் என கருதலாம் என விமர்சகர்கள் கூறினர்.

இந்த நிலையில், இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸில் தோல்வி அடைந்தது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். 

அங்கேயே தென்னாப்பிரிக்காவின் தோல்வி பாதி உறுதியாகி விட்டது. காரணம், கொல்கத்தா ஆடுகளத்தில் இரண்டவதாக பேட்டிங் செய்வது கடினம்.

அந்த வகையில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 326 ரன்கள் குவித்தது. விராட் கோலி 101 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்களில் ஆல் - அவுட் ஆனது. இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின் தென்னாப்பிரிக்காவின் தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு கொல்கத்தா மைதானம் ஒரு காரணம் என்பதை கூறி விட்டு, அடுத்து அரை இறுதிப் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா இதே கொல்கத்தா மைதானத்தில் ஆட வேண்டி வரலாம் என்பதைக் கூறி தன் கவலையை வெளிப்படுத்தினார். 

உலகக்கோப்பை அரை இறுதிச் சுற்றில் 2 மற்றும் 3 வது இடம் பிடிக்கும் அணிகள் கொல்கத்தா மைதானத்தில் தான் மோத உள்ளன. அதைத் தான் கூறி இருக்கிறார் பவுமா.

அவர் இது பற்றி கூறுகையில், "இந்த மைதானம் சவாலானது என தெரியும். நாங்கள் சேஸிங் செய்து தோல்வி அடைந்து இருக்கிறோம். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுடன் நாங்கள் இது பற்றி முன்பே பேசி இருந்தோம். 

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 10 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தது. ஆனால், நாங்கள் அதன் பின் சிறப்பாக செயல்பட்டோம். ரன் ரேட்டை குறைத்தோம். ரோஹித் சர்மா அடித்தளம் அமைத்தார். கோலி - ஸ்ரேயாஸ் நல்ல கூட்டணி அமைத்தனர். 

நாங்கள் எதிர்பார்த்தது போலவே பிட்ச் இருந்தது. ஆனால், நாங்கள் அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட இதே மைதானத்தில் தான் நாங்கள் அரை இறுதியிலும் ஆட இருக்கிறோம்" என்றார் பவுமா.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...