கடைசி போட்டியில் இருந்து தமிழக வீரர் நீக்கம்.. பிசிசிஐ எடுத்த தீர்மானம்... காரணம் இதுதான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், 5ஆவது டெஸ்ட் போட்டி, மார்ச் 7ஆம் தேதி முதல் தர்மசாலாவில் நடைபெற்றவுள்ளது.
இளம் வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஆகாஷ் தீப், சர்பரஸ் கான், துரூவ் ஜோரல், ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் தொடர்ந்து அபாரமாக விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை யாராலும் மறுக்க முடியாது.
இதனால், 15 வீரர்கள் படியலில் தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், கேஎஸ் பரத் ஆகிய தரமான இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்திய அணி ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருவதால், கடைசி டெஸ்டில், ஸ்பின்னர்கள் சுந்தர், அக்சருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது.
கடைசி டெஸ்டில் ஓய்வு பெறும் ரோஹித்? புதிய கேப்டன் இவர்தான்.. பிசிசிஜயின் அதிரடி திட்டம் இதுதான்!
வாஷிங்டன் சுந்தருக்கு கடைசி டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுவதால், அவரை உடனே விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அணியில் இருந்து விடுவித்த உடனே, சுந்தர் ரஞ்சிக் கோப்பைக்கான தமிழக அணியில் இணைய உள்ளார்.
ரஞ்சிக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், தமிழ்நாடு மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி, மார்ச் 2 முதல் 6ஆம் தேதிவரை நடைபெறும். மும்பை அணி, பலமிக்கதாக இருப்பதால்தான், வாஷிங்டன் சுந்தரின் உதவி தமிழக அணிக்கு தேவைப்படுகிறது.
அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வாஷிங்டன் சுந்தர், இந்திய அணிக்காக 4 டெஸ்ட்களில் 66.25 சராசரியுடன் 265 ரன்களை அடித்துள்ளார். அதேபோல், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 4 இன்னிங்ஸில் 6 விக்கெட்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |