சச்சின் வழி கோலி... விராட் கோலியின் தற்காலிக ஓய்வுக்கு இதுதான் காரணமா? 

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Nov 30, 2023 - 18:52
Nov 30, 2023 - 19:01
சச்சின் வழி கோலி... விராட் கோலியின் தற்காலிக ஓய்வுக்கு இதுதான் காரணமா? 

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி, ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனை முறியடித்து ஐம்பதாவது சதத்தை தொட்டார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் ஜாம்பவானான விராட் கோலி உலகக்கோப்பை கிடைக்கவில்லை என்பதால் சோகத்தில் உள்ளார்.

தனக்கு வயது 35 ஆவதால் சச்சினின் வழியை பின் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தும் முடிவை எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 14,000 ரன்களை விராட் கோலி தொட உள்ளதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் வெறும் 29 சதம் உள்ளடங்களாக 8676 ரன்கள் தான் அடித்திருக்கிறார். 

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி அதில் தன்னுடைய ரெக்கார்டை மேம்படுத்தும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட உள்ளார். அடுத்தடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. அத்துடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 2025இல் தான் நடைபெற உள்ளது. 

இதனால் அடுத்த எட்டு மாதத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட போகும் தமது முடிவை பிசிசிஐ இடம் கோலி தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. 

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் அதாவது, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு பெரிய அளவில் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்காத சச்சின் 2013ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும்தான் விளையாடினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!