இந்திய அணியின் கதையை முடிக்க இரண்டு ஓவர் போதும்.. எச்சரித்த பாகிஸ்தான் வீரர்!
நாக்அவுட் சுற்றில் இந்திய அணியை வீழ்த்த இதனை செய்தால் போதும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளார்
உலகக் கோப்பை 2023 தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
அரையிறுதியைப் பொறுத்தவரை முதல் அரையிறுதியில் 1, 4 ஆகிய இடங்களை பிடித்த அணிகள்தான் மோதும். இரண்டாவது அரையிறுதியில் 2ஆவது இடத்தை பிடித்த தென்னாப்பிரிக்கா, 3ஆவது அரையிறுதியை பிடித்த ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும். போட்டி பகல் இரண்டு மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அரையிறுதிதான் இன்னமும் உறுதியாகவில்லை.
முதலிடம் பிடித்துள்ள இந்திய அணியுடன் மோதப் போகும் அணி எது என்பது குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை. 4ஆவது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையில் போட்டி நிலவி வருகிறது.
நியூசிலாந்து அணி 9 லீக் ஆட்டங்களில் 10 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 8 லீக் ஆட்டங்களில் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து களமிறங்கும்.
இந்நிலையில், அந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நம்ப முடியாத வகையில் விளையாடியாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. ஆகையால், நியூசிலாந்து அணிக்குதான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்.
இந்நிலையில், நாக்அவுட் சுற்றில் இந்திய அணியை வீழ்த்த இதனை செய்தால் போதும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளார்.
அரையிறுதியில் பாகிஸ்தான்? சவுரவ் கங்குலி கூறியதுக்கு வேற அர்த்தம்.... இதுதான் காரணமா?
அதில், ''லீக் சுற்றில் எந்த அணியாலும் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. 2015, 2019ஆம் ஆண்டுகளில் இந்திய அணி இப்படிதான் லீக் சுற்றின் முடிவில் டாப்பில் இருந்தார்கள். அடுத்து, அரையிறுதியில் தோற்று வெளியேறினார்கள்.
தற்போதும் அதேபோன்ற ஒரு நிலைமை இருக்கிறது. நாக்அவுட் சுற்றின்போது அவர்களுக்கு அழுத்தங்கள் இருக்கும். அப்போது, 2 ஓவர்களில் அவர்கள் சொதப்பினால்கூட, அழுத்தங்கள் காரணமாக சொதப்பிவிடுவார்கள்'' எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ''தற்போது இருக்கும் இந்திய அணி பலமிக்கதாக இருக்கிறது. இதுவே, எதிரணிகளுக்கு 50 சதவீத அழுத்தங்களை ஏற்படுத்தும். இந்த அழுத்தங்களை ஒடைத்து, எதிரணிகள் விளையாடினால் மட்டும்தான் வெற்றியைப் பெற முடியும்.
இந்த அழுத்தங்களை உடைக்கும் குணம் ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கிறது. மற்ற அணிகளும் இதேபோல் அழுத்தங்களை உடைத்து, தைரியத்துடன் விளையாடினால் மட்டும்தான் இந்திய அணிக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும்'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |