ஐசிசி உலக கோப்பை 2023 - அணித் தேர்வில் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் தப்பித்த ரோஹித்

ஐசிசி உலக கோப்பை 2023: 2௦23 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வில் செய்த தவறை சரி செய்துள்ளது இந்திய அணி. ஒரே நேரத்தில் மூன்று இடது கை ஸ்பின்னர்களை தேர்வு செய்த இந்திய அணி, தற்போது அந்த தவறை சரி செய்து இருக்கிறது.

ஐசிசி உலக கோப்பை 2023 - அணித் தேர்வில் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் தப்பித்த ரோஹித்

ஐசிசி உலக கோப்பை 2023: 2௦23 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வில் செய்த தவறை சரி செய்துள்ளது இந்திய அணி. ஒரே நேரத்தில் மூன்று இடது கை ஸ்பின்னர்களை தேர்வு செய்த இந்திய அணி, தற்போது அந்த தவறை சரி செய்து இருக்கிறது.

இரண்டு அல்லது மூன்று இடது கை ஸ்பின்னர்களை ஒரே நேரத்தில் போட்டியில் ஆட வைப்பது எதிரணிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

செப்டம்பர் 5 அன்று உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அக்சர் பட்டேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று இடது கை ஸ்பின்னர்கள் இடம் பெற்று இருந்தனர். 
அவர்கள் மூவரும் இடது கை பவுலர்கள் என்பதோடு அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் கூட இல்லை. அப்போது முன்னாள் வீரர்கள் பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்தனர். 

எப்படி அணியில் ஆஃப் ஸ்பின்னர் இல்லாமல் ஆடுவீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும், வலது கை ஸ்பின்னர் இருந்தால், அது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும். 

ஆனால், வெறும் இடது கை ஸ்பின்னர்களை மட்டுமே ஆட வைத்தால் எதிரணிகள் நம் பந்துவீச்சை போட்டிக்கு முன்பே கணித்து திட்டம் போட்டு குறிப்பிட்ட ஓவர்களை குறி வைத்து ரன் குவித்து விடுவார்கள்.

அது மட்டுமின்றி, அக்சர் பட்டேல், ஜடேஜா இருவரையும் ஒரே போட்டியில் ஆட வைத்தால் இருவருமே மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து தான் பேட்டிங் செய்ய வர வேண்டும். 

அவர்கள் இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள் தான். வலது கை ஸ்பின்னர் கொண்டு அவர்கள் விக்கெட்டை வீழ்த்தவும் எதிரணிகள் திட்டமிடும். இதுவே அக்சர் பட்டேலை அணியில் எடுத்த போது இருந்த சிக்கல்.

இது எந்த அளவுக்கு அணித் தேர்வில் சிக்கலை ஏற்படுத்தும் என்றால், ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் என இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் இருந்தார்கள். இருவருமே அப்போது நல்ல ஃபார்மில் இருந்தார்கள். 

சிஎஸ்கே அணியிலும் இரண்டு ஸ்பின்னர்களை ஆட வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், தோனி, ஒரே நேரத்தில் ஜடேஜா மற்றும் மிட்செல் சான்ட்னரை போட்டிகளில் ஆட வைக்கவில்லை.

எதிரணியில் இரண்டு அல்லது மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் ஆடினால் அந்த ஓவர்களில் இவர்கள் இருவரையுமே பயன்படுத்த முடியாது. அதனால், ஓவர்களை பவுலர்களுக்கு பிரித்துக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். 

இதை கருத்தில் கொண்டே தோனி அப்போது அந்த முடிவை எடுத்தார். அதே சிக்கல் இந்திய அணிக்கும் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்டு இருக்கும்.

ஜடேஜா, குல்தீப் யாதவ் என ஏற்கனவே இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் இருக்கும் போது மூன்றாவது இடத்திலும் இடது கை ஸ்பின்னரை தேர்வு செய்வது தவறு என்ற நிலையில், அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அக்சர் பட்டேல் காயத்தில் சிக்கியதால் மட்டுமே இந்த மாற்றமும் நடந்துள்ளது. யதேச்சையாக நடந்த இந்த மாற்றம் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெரிய அளவில் நன்மை செய்துள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp