அரையிறுதியில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. காத்திருக்கும் இரண்டு கண்டம்... என்ன செய்த போகிறார் ரோஹித்.. 

பாகிஸ்தான் அணியின் தோல்வியால் அரை இறுதியில் மோத உள்ள அணிகள் கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. அந்த வகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

அரையிறுதியில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. காத்திருக்கும் இரண்டு கண்டம்... என்ன செய்த போகிறார் ரோஹித்.. 

2023 உலகக்கோப்பை தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்தாலும் அரை இறுதிப் போட்டியில் பெரிய கண்டம் உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

பாகிஸ்தான் அணியின் தோல்வியால் அரை இறுதியில் மோத உள்ள அணிகள் கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. அந்த வகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மோத உள்ளன. ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டாவது அரை இறுதியில் மோத உள்ளன.

வரலாறை பார்த்தால், அரை இறுதி, இறுதி போன்ற போட்டிகளில் இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி தோல்விகளை பரிசாக அளித்துள்ளது இதுதான் இந்திய அணிக்கு காத்திருக்கம் முதல் கண்டம். 

இரண்டாவது கண்டம் என்னவென்றால், அரை இறுதிப் போட்டி நடக்க உள்ள மைதானத்தில், இதுவரை, நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியதே இல்லை. அங்கு நியூசிலாந்து வெற்றிகளை மட்டுமே இதுவரை குவித்து வருகின்றது.

கடந்த 2000 ஆண்டில் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன், 2019 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

பின்னர், 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை பரிசாக வாங்கி இருக்கின்றது.

தற்போது இந்திய அணி பந்துவீச்சில் வலுவாக உள்ளதுடன், பேட்டிங்கில் தான் சொதப்ப வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது. எனவே, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்து பெரிய ஸ்கோர் அடிக்க இந்திய அணி இப்போதே திட்டமிட வேண்டும்.

அடுத்து, இந்தியா - நியூசிலாந்து அரை இறுதி நடக்க உள்ள மும்பை வான்கடே மைதானத்தை எடுத்து பார்த்தால், இதுவரை, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கின்றன.

எனினும், அந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது எனவே, அந்த மைதானம் பந்தை ஸ்விங் செய்ய ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி, நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் டிம் சவுதி, ட்ரென்ட் பவுல்ட், பெர்குசன் ஆகியோரிடம் முதல் சில ஓவர்களில் கவனமாக துடுப்பெடுத்தாட வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன்.

இந்த இரண்டு கண்டங்களில் இருந்து தப்பிக்க ரோஹித்த என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்று காத்திருந்து பார்ப்போம்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...