எந்த அணித்தலைவரும் செய்யாத சாதனை... ரோஹித் சர்மா படைத்த வரலாறு!

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து  உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

முன்னதாக 2019 உலகக்கோப்பை தொடரில் கேன் வில்லியம்சன்  578 ரன்கள் குவித்து இருந்த நிலையில், ரோஹித் சர்மா 2023 உலகக்கோப்பை தொடரில் 597 ரன்கள் குவித்து அதை முறியடித்துள்ளார். 

அடுத்து ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்தி நான்காம் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. 

உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2278 ரன்களுடன் இருக்கிறார். அடுத்த இடத்தில் விராட் கோலி 1795 ரன்களுடன் இருக்கிறார்.

ரிக்கி பாண்டிங் 1743 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்க, ரோஹித் சர்மா இறுதிப் போட்டியில் 47 ரன்கள் அடித்ததன் மூலம், 1575 ரன்கள் குவித்து நான்காம் இடத்தை பிடித்துள்ளார். குமார் சங்ககாரா 1532 ரன்களுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...