இந்திய அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் ஆடப்போவது அந்த அணிதான்.. பாகிஸ்தான் ஜாம்பவான் வெளியிட்டுள்ள தகவல்!

இந்த அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணியும் விளையாடவுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் ஆடப்போவது அந்த அணிதான்.. பாகிஸ்தான் ஜாம்பவான் வெளியிட்டுள்ள தகவல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணியை பாகிஸ்தான் ஜாம்பவான் மிஸ்பா உல் ஹக் கணித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. 

இந்த அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணியும் விளையாடவுள்ளது.

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் இதே 4 அணிகள் தான் உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இதனால் மீண்டும் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா அல்லது  இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை காட்டிலும் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்களான மிஸ்பா உல் ஹக் மற்றும் மாலிக் ஆகிய இருவரும் கணித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

மிஸ்பா உல் ஹக் கூறுகையில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் தான் இறுதிப்போட்டியில் ஆடுவார்கள் என்றும், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள 4 அணிகளும் மிகவும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால்,  யார் வேண்டுமானாலும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளார்.

எனினும், மற்ற 3 அணிகளை ஒப்பிடும் போது, இந்திய அணி கொஞ்சம் கூடுதல் பலம் வாய்ந்த அணியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதேவேளை மாலிக் , இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள் என்று கணித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...