இந்தியா - நியூசிலாந்து அரையிறுதியில் மோத வாய்ப்பு... மோதினால் வெற்றி யாருக்கு? தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுவதுடன், அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
 
                                உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி விளையாடினால், எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்விக்கான பதில் காலத்தின் கையிலேயே உள்ளதாக என்று நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் தெரிவிக்கின்றார்.
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 46.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுவதுடன், அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
 
இதனிடையே இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றிக்கு காரணமாக அமைந்த போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இதன்பின் போல்ட் பேசுகையில், புதிய பந்தில் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நிச்சயம் சவால் நிறைந்தவை. அதேபோல் இந்த வகையான போட்டிகளில் புதிய பந்தில் தொடங்குவது கொஞ்சம் சவால் நிறைந்தது. இந்திய மைதானங்களில் விளையாடுவது எளிதானதல்ல. இந்திய அணி அணி மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இதனால் அரையிறுதியில் யார் வெல்வார்கள் என்பதை காலம் தான் சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி இந்திய அணி அடைந்த தோல்வி, இன்று வரை ரசிகர்களின் மனதில் மறையாமல் உள்ளது. அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
இந்த தோல்விகளுக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று காத்திருந்து பார்க்கலாம்..
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






