இந்திய அணியில் இளம் வீரருக்கு தொடரும் அநீதி... ஒரு இடத்திற்கு 3 பேர் போட்டி!

டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பில் அஜித் அகார்ருக்கு தலைமையிலான தேர்வு குழுவினர் யோசித்து வருகின்றனர்.

இந்திய அணியில் இளம் வீரருக்கு தொடரும் அநீதி... ஒரு இடத்திற்கு 3 பேர் போட்டி!

டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பில் அஜித் அகார்ருக்கு தலைமையிலான தேர்வு குழுவினர் யோசித்து வருகின்றனர்.

இந்திய அணியில் பல்வேறு இடங்கள் உறுதியாகிவிட்ட நிலையில் ரோகித் சர்மாவுக்கு தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் இருப்பார் என்று கூறப்படுகின்றது.

ரிஷப் பண்ட், அதிரடியாக விளையாடி வருவதால் முதன்மையான விக்கெட் கீப்பராக அவருடைய பெயர் தான் பரிசீலினையில் உள்ளது. 

இந்த நிலையில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தில்சஞ்சு சாம்சன் தான் இடம்பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேர்வுக்குழுவினர் சஞ்சு சாம்சனுக்கு பதில் கே.எல் ராகுலுக்கு தான் முன்னுரிமை கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியாக பார்க்கப்படுவதுடன், வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோன்று ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இரண்டு சுழற் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக சுழற் பந்துவீச்சாளரை சேர்க்கலாமா இல்லை வேகபந்து வீச்சாளரை சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு ரவி பிஷ்னாய், அக்சர் பட்டேல் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் 3 வீரர்களும் போட்டி போட்டு வருகிறார்கள். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...