ஒரு வழியா அணிக்கு திரும்பும் சூர்யகுமார் யாதவ்... இனியாவது வெற்றி கிடைக்குமா? ஏக்கத்தில் ரசிகர்கள்!
தொடர்ந்து என்சிஏ-வில் பயிற்சியை தொடங்கிய சூர்யகுமார் யாதவ், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியில் படிப்படியாக ஈடுபட்டு வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளமை அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றதை மும்பை அணி ரசிகர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சொந்த மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியா எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி என்ன செய்வதென புரியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் மும்பை அணியின் தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் இல்லாததும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் மும்பை ரசிகர்கள், சூர்யகுமார் யாதவ் எப்போது வருவார் என்று கேட்டு வந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூர்யகுமார் யாதவ், 8 வாரங்களுக்கு மேலாக ஓய்வில் இருந்தார்.
தொடர்ந்து என்சிஏ-வில் பயிற்சியை தொடங்கிய சூர்யகுமார் யாதவ், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியில் படிப்படியாக ஈடுபட்டு வந்தார்.
ஐபிஎல் தொடருக்கு முன் முழு ஃபிட்னஸையும் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்சிஏ-வின் ஃபிட்னஸ் சோதனையில் சூர்யகுமார் யாதவ் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் என்சிஏ சார்பாக சூர்யகுமார் யாதவிற்கு மீண்டும் வைக்கப்பட்ட சோதனையில், அவர் முழு ஃபிட்னஸையும் எட்டியது தெரிய வந்துள்ளது.
இதற்கான சான்றிதழ் ஏப்ரல் 5ஆம் தேதி கிடைக்கும் என்பதால், அதன்பின் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியுடன் இணைவார் என்றும் ஏப்ரல் 8ஆம் தேதி நடக்கும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகின்றது.
கடந்த ஐபிஎல் சீசனில் சூர்யகுமார் யாதவ் 4 அரைசதம், ஒரு சதம் உட்பட 605 ரன்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |