ஹர்திக் பாண்டியா மறைத்த உண்மை... ரோஹித் வைக்கப் போகும் ஆப்பு... இந்திய அணியில் ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்
உலக கிண்ணத்துக்கான இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ரோஹித் சர்மா ஓரங்கட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
 
                                உலக கிண்ணத்துக்கான இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ரோஹித் சர்மா ஓரங்கட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
தனக்கு காயம் ஏற்பட்டதை மறைத்து ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடி வருவதாக தகவல் வெளியான பின்னணியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களும் பந்து வீசினார். ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி இருக்கிறார்.
இதனால், அவர் காலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியா கால்களில் காயம் ஏற்பட்டதுடன், அதில் இருந்து மீண்டு வர ஹர்திக் பாண்டியாவுக்கு ஐந்து மாதங்கள் ஆனது.
 
ஆனால், ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளுக்கு பின் பந்து வீசுவதை நிறுத்திக் கொண்டதால், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி அணியுடனான போட்டிக்கு பின் பந்து வீசாதது குறித்து கேட்ட போது அணியில் போதிய பந்துவீச்சாளர்கள் இருப்பதால் தான் பந்து வீசவில்லை என கூறிய பாண்டியா, தனக்கு காயம் இருப்பதை மறைத்து இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் இருக்கும் பட்சத்தில் அவரை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்காமல் போக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






