சுப்மன் கில் சொத்து மதிப்பு தெரியுமா? 24 வயதில் இதனை கோடி வருமானமா!
சுப்மன் கில் சொந்தமாக ரேன்ச் ரோவர் எஸ்யூவி காரும், மஹிந்திரா தார் ஜீப்பும் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.1 முதல் 1.5 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் கிரிக்கெட்டில்பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். நடப்பாண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 அரைசதங்கள், 9 அரைசதங்கள் என்று வேற லெவலில் இருக்கிறார்.
அத்துடன், ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு தாவியதால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் இளம் வயதிலேயே பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் சுப்மன் கில்லின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி சுப்மன் கில் பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ரூ.3 கோடி, ஐபிஎல் தொடர் மூலமாக ரூ.8 கோடி, ஒவ்வொரு டி20 போட்டிக்கும் ரூ.3 லட்சம், ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சம், ஒவ்வொரு ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் ஊதியமாக பெற்று வருகிறார்.
அதேபோல் சுப்மன் கில் சொந்தமாக ரேன்ச் ரோவர் எஸ்யூவி காரும், மஹிந்திரா தார் ஜீப்பும் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.1 முதல் 1.5 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல் பஞ்சாப் மற்றும் ஃபிரோஸ்பூரில் சொந்தமாக வீடுகளை வாங்கியுள்ளார் சுப்மன் கில். இதுமட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சுப்மன் கில் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பதை பிசிசிஐ தடுக்கிறதா? கிளப்பியுள்ள சர்ச்சை!
கேசியோ, பஜாஜ் அலையன்ஸ், டாடா கேப்பிட்டல், பீட் எக்ஸ்பி, என்கேஜ், மஸ்ஸில் பிளேஸ், சியர் டயர்ஸ், ஜில்லட் நிறுவனம், ஆக்கோ இன்சூரன்ஸ், பாரத் பே, மை லெவன் சர்க்கிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சுப்மன் கில் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்.
மேலும் ட்விட்டரில் 5 மில்லயனுக்கும் அதிகமான ஃபாலோயர்களும், இன்ஸ்டாகிராமில் 11 மில்லியனுக்கும் அதிக ஃபாலோயர்களையும் பெற்றுள்ளார். இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.32 கோடி வரை சுப்மன் கில் வருவாய் ஈட்டி வருகிறார்.
சிறிய வயதிலேயே கோடிக்கணக்கில் சுப்மன் கில் வருவாய் ஈட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.