குரங்கு கடித்ததால் ரிங்கு சிங் இப்படி ஆகிட்டார்.. சுப்மன் கில் சொன்ன தகவல்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று உள்ள ரிங்கு சிங், தான் தயார் ஆகி வருவது  குறித்து பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.

குரங்கு கடித்ததால் ரிங்கு சிங் இப்படி ஆகிட்டார்.. சுப்மன் கில் சொன்ன தகவல்!

இந்திய அணி வீரரான ரிங்கு சிங் அதிக சிக்ஸர்களை இலகுவாக அடிக்க அவரது உடல் பலம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது. தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும் ரிங்கு சிங் குறித்து சக வீரரான சுப்மன் கில் வேடிக்கையான சில விடங்களை சொல்லி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று உள்ள ரிங்கு சிங், தான் தயார் ஆகி வருவது  குறித்து பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.

எதிரணி வீரரை அடிக்க சென்ற ஷிக்கந்தர் ராசா.. 2 போட்டிகளில் விளையாட அதிரடி தடை

அப்போது தனது உடற்பயிற்சி பற்றியும், அதனால் தன்னால் மிக வேகமாக ஓட முடிகிறது எனவும் ரிங்கு சிங் கூறிய போது, அவருக்கு பின்னே நின்றிருந்த சுப்மன் கில், "ரிங்கு சிங்கை குரங்கு கடித்ததில் இருந்து தான் அவர் இப்படி வேகமாக ஓடத் துவங்கி இருக்கிறார்" என வேடிக்கையாக கூறினார்.

அதனையடுத்து, ரிங் சிங் தன் கையில் குரங்கு கடித்த இடத்தை காண்பித்தார். ரிங்கு சிங் தான் ஒரு அனுமான் பக்தர் எனவும் முன்பு கூறி இருந்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் போது நல்ல உடற்தகுதி இருந்தால் தான் அணியில் நீண்ட காலம் இருக்க முடியும் என்பதால், இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதாக கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...