போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்; அதிபர் அதிர்ச்சி தகவல்

பிரபல பெண்கள் பாடசாலையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்; அதிபர் அதிர்ச்சி தகவல்

கொழும்பின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை விசாரணை செய்துள்ளனர்.

இரு மாணவிகளே இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒர் நபரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.

மேற்படி மாணவிகள் குளிசைகளை பாடசாலையின் கழிவறைக்குச் சென்று அருந்துவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பாடசாலையின் அதிபர், மருதானை பொலிஸாருக்கு தொலைபேசி  ஊடாக எடுத்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் மாணவிகள் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.