கடைசி நேரத்தில் காலை வாரிய ஜடேஜா.. ஃபினிஷர்னா என்னன்னு தெரியுமா? 

ரவீந்திர ஜடேஜா 14 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றி உள்ளார்.

கடைசி நேரத்தில் காலை வாரிய ஜடேஜா.. ஃபினிஷர்னா என்னன்னு தெரியுமா? 

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 14 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றி உள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது. 

அதிரடியாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களை சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர், ரிங்கு சிங் - ஜடேஜா இருவரிடமும் ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது.

மொத்த ஆட்டத்தையும் மாற்றிய முதல் 6 ஓவர்கள்... இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே.... சூர்யகுமார்!

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்களில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி ஓவரில் ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்த ரிங்கு சிங், அவர் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2வது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். 

கடைசி நேரத்தில் மழை பெய்ய தொடங்கியதால், இந்திய அணியின் ஆட்டம் 19.3 ஓவர்களுடன் நிறைவுக்கு வந்தது. ஒருவேளை ஜடேஜா அடுத்த 2 பந்துகளில் ஒரு சிக்ஸ் அல்லது ஒரு பவுண்டரியை அடித்திருந்தால் கூட தென்னாப்பிரிக்கா அணிக்கு கொஞ்சம் கூடுதல் இலக்கை நிர்ணயிக்க முடிந்திருக்கும். 

ஆனால் ஜடேஜா வழக்கம் போல் ஃபினிஷர் என்ற பெயரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...