தோல்விக்குக் காரணம் இதுதான்... ஆபத்தான ஆடுகளம்! – அஸ்வின் வெளியிட்ட அதிரடி தகவல்

கொல்கத்தா டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவிடம் 30 ரன் வித்தியாசத்தில் இந்தியா சந்தித்த தோல்வி, ஈடன் கார்டன் மைதானத்தின் பிச்சைச் சுற்றி கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

தோல்விக்குக் காரணம் இதுதான்... ஆபத்தான ஆடுகளம்! – அஸ்வின் வெளியிட்ட அதிரடி தகவல்

கொல்கத்தா டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவிடம் 30 ரன் வித்தியாசத்தில் இந்தியா சந்தித்த தோல்வி, ஈடன் கார்டன் மைதானத்தின் பிச்சைச் சுற்றி கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்திய அணியின் வேண்டுகோளைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற "டர்னர்" பிச்சே தயாரிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளுக்கு நடுவில், இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சு நிபுணர் ரவிச்சந்திரன் அஸ்வின், பிட்ச் தயாரிப்பாளர்களையே குறிவைத்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“ஈடன் கார்டன் ஒரு ‘டர்னர்’ அல்ல; தவறான முறையில் உருவாக்கப்பட்ட, ஆபத்தான பிச்சே அது,” என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார்.
அவர் மேலும், “யாராவது இதை ‘டர்னர்’ என்று கூறினாலும், நான் ஒரு சதவிகிதமும் ஏற்க முடியாது. திட்டமிட்ட தயாரிப்பு கைவிடப்பட்டதால் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே இது,” என்று வலியுறுத்தினார்.

"ஈடன் கார்டனில் உண்மையான டர்னர் உருவாக்க முடியாது"

பிச்சின் தொழில்நுட்ப தன்மையை விளக்கி அஸ்வின் கூறியது: “ஈடன் கார்டன் போன்ற புவியியல் அமைப்புள்ள மைதானத்தில் நீங்கள் ஒரு உண்மையான டர்னர் பிச்சை உருவாக்க முடியாது. அப்படி முயற்சித்தால், அது கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறான கணிக்க முடியாத, ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும்.”

“டெம்பா பவுமாவைத் தவிர எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் கூட அடிக்காதது, இந்த பிச்சின் தரமே மிக மோசமாக இருந்தது என்பதற்கு சான்று.”

“இது மிக இளம் அணி. அவர்கள் வளர நேரம் எடுக்கும். 2012-ல் நான், விராட், புஜாரா ஆகிய நாங்களும் இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் தொடரை இழந்தோம். பின்னர் தான் எப்படி உலகத் தரசிறந்த அணிகளை எதிர்கொள்வது என்பதைக் கற்றுக் கொண்டோம். இந்த அணியும் வளர்ந்தே தீரும்.”

2012 இங்கிலாந்து தொடரின் தோல்விக்குப் பிறகு, 2023-ல் நியூசிலாந்து 3–0 என ஒயிட்வாஷ் செய்யும் வரை, இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.