முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

ரணில் விக்ரமசிங்க இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றது தொடர்பான விசாரணைக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பயணம் 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பத்து பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது.