பாண்டியன் ஸ்டோரின் இறுதி கட்டம்.. ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அண்ணன் தம்பியின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது இறுதி அத்தியாயத்தில் இருக்கும் நிலையில் என்ன மாதிரி கதை முடிவு வரும் என்று அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் 5 வருடங்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி சாதனை படைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஆயிரம் எபிசோடுகளை தாண்டிய முதல் சீரியல் என்றும் இந்த சீரியல் சாதனை படைத்திருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இறுதி கட்டம் வந்திருக்கிறது.
அண்ணன் தம்பியின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது இறுதி அத்தியாயத்தில் இருக்கும் நிலையில் என்ன மாதிரி கதை முடிவு வரும் என்று அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதே நேரத்தில் இதுவரைக்கும் தன்னுடைய குடும்பத்தின் மீது நம்பிக்கையாய் இருந்த மீனா பிரசாந்தின் சூழ்ச்சியால் தன்னுடைய அப்பாவை கொலை முயற்சி செய்தது ஜீவா மற்றும் கதிர் தான் என்று தப்பாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு வந்து மீனாவிடம் பேச வந்த முல்லையையும் மீனா அவமானப்படுத்தி அனுப்பி இருந்தார். இந்த நிலையில் இனி பிரசாந்த் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்பது யார் மூலமாக தெரிய வரும் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.
இந்த நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவாவும் கதிரும் அந்த நேரத்தில் எங்க இருந்தாங்க என்கிற சின்ன ஆதாரம் கிடைத்தால் கூட அவங்கள ஈசியா வெளிய கொண்டு வந்து விடலாம் என்று மூர்த்தி ஐஸ்வர்யா கண்ணன் முல்லையிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மீனா வீட்டிற்குள் வருகிறார் மீனாவை பார்த்ததும் முல்லை கோபத்தில் வீட்டிற்குள் போகப் போகிறார். அப்போது மூர்த்தி அவரை நிற்க சொல்லிவிட்டு மீனா என்னதான் சொல்ல வருதுன்னு கேட்போம் என்று மீனா என்னப்பா இப்ப வந்திருக்க என்று விசாரிக்கிறார்.
அப்போது மீனா மாமா இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம், எங்க அப்பாவை அடிச்சது மேனேஜர் சாரை கொலை பண்ணுனது எல்லாத்துக்கும் காரணம் அந்த பிரசாந்த் தான். அவனை போலீஸில் பிடிச்சு கொடுத்து ஜீவாவையும் கதிரையும் ரெண்டு பேரையும் வெளியே கொண்டு வரணும் என்று சொல்ல, அதற்கு மூர்த்தி மீனா எனக்கு ஒரு யோசனை வருது பா அதை மட்டும் நம்ம சரியா செஞ்சிட்டோம்னா அவன் காலம் முழுக்க ஜெயில்ல தான் இருக்க வேண்டும் என்று சொல்ல எல்லோரும் சரி என்று சொல்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் ஜனார்த்தனனின் ரூம் அருகில் மீனா, மீனாவின் அம்மா, மீனாவின் தங்கை என மூன்று பேரும் காத்திருக்க அப்போது பிரசாந்த் நீங்க எவ்வளவு நேரம் தான் இப்படி ரெஸ்ட் இல்லாம முழிச்சி இருப்பீங்க? நீங்க வீட்டுக்கு போங்க நான் பாத்துக்குறேன் உங்க அப்பாவ என்று சொல்லி மூன்று பேரையும் அனுப்பி வைக்கிறார். அதைத்தொடர்ந்து எல்லோரும் போகும்போது பிரசாந்த் வெளிய அக்கம்பக்கம் பார்த்துவிட்டு ரூமிற்குள் போகிறார்.
அப்போது பிரசாந்தை கையும் களவுமாக பிடிப்பதற்காக ரூமிற்குள் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் ஒளிந்து இருக்கின்றனர். அதேபோல ஹாஸ்பிடலில் முல்லையின் அப்பா, மூர்த்தி என ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக இருந்து வெளியே வருகின்றனர்.
வெளியான ப்ரோமோவை பார்க்கும் போது கடைசி நேரத்தில் இவர்கள் கூட்டுக் குடும்பமாக சேர்ந்து பாபநாசம் திரைப்படத்தை மிஞ்ச வைக்கும் அளவிற்கு மிரட்டுறாங்களே? இவங்க போடுற பிளானால் எப்படியும் பிரசாந்து மாட்டி விடுவான். ஜீவா கதிரை, வெளியே கொண்டு வந்து அடுத்த வாரத்தோடு சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |