யாருமே இப்படி செய்ய மாட்டார்கள்... ரோகித் செய்தது மட்டமான கேப்டன்சி.. ரவி சாஸ்திரி காட்டம்!
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் வைத்து இரண்டாவது செசனை ஆரம்பித்தார்.
 
                                இந்திய அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் மோதி வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல்.ராகுலின் அபார சதத்தால் தப்பி பிழைத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் சேர்த்தது. ரபாடா மிகச் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு மார்க்ரம் மற்றும் டீன் எல்கர் இருவரும் துவக்க வீரராக வந்தார்கள். இதில் மார்க்ரம் முகமது சிராஜ் ஓவரின் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ஒரு நாள் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் டோனி டி சோர்சி, எல்கர் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி விக்கெட் மேற்கொண்டு விழாமல் மதிய உணவு இடைவேளைக்கு சென்றது.
ரோகித் சர்மா செய்த தவறு.. மீண்டு வருமா இந்திய அணி?.. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!
 
இதற்குப் பிறகு மீண்டும் திரும்ப வந்த இந்த ஜோடி தொடர்ச்சியாக இந்திய பந்துவீச்சை தாக்கி விளையாடியது. இந்த கூட்டணி மொத்தம் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் வைத்து இரண்டாவது செசனை ஆரம்பித்தார்.
இந்த இடத்தில் மிக வேகமாக 50 ரன்கள் பக்கம் இந்த ஜோடி திரட்டியது. இது தென் ஆப்பிரிக்காவுக்கு நல்ல வேகத்தை கொடுத்தது. பிறகு பும்ரா வந்துதான் மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளை எடுத்து திருப்புமுனை கொடுத்தார். 
தற்பொழுது தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. எல்கர் சதம் அடித்திருக்கிறார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” எந்த ஒரு பந்துவீச்சு ஆர்டரிலும், புதிய செசனை இப்படி துவங்கும் பொழுது சர்துல் மற்றும் பிரசித் கிருஷ்ணா மாதிரியான பந்துவீச்சாளர்களை வைத்து துவங்க மாட்டார்கள். இது எனக்கு குழப்பத்தையும் எரிச்சலையும் கொடுக்கிறது.
நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த பொழுது இது குறித்து நிறைய விவாதித்து இருக்கிறோம். அப்பொழுதெல்லாம் நாங்கள் புதிய செசனின் ஆரம்பத்தில் சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டே துவங்க முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறி உள்ளார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






