இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் கடவுள் கோலி கிடையாது... இவர் தான்... இங்கிலாந்து வீரர்
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கடவுளாக கில் தான் வருவார் என்று தோன்றுகிறது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் முதல் முறையாக 700 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் தன்வசப்படுத்தினார்.
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் என்றுதான் ரசிகர்கள் பாராட்டி வருவார்கள். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிரிக்கெட்டின் கடவுள் இனி வேறொரு வீரர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன் சச்சினிடமிருந்து கிரிக்கெட் பாரம்பரியம், புகழ் ஆகியவற்றை விராட் கோலி பெற்றுக்கொண்டார். எனக்கென்னவோ விராட் கோலி இடமிருந்து அந்த புகழ் பாரம்பரியம் அனைத்தும் சுப்மன் கில்லுக்கு செல்லும் என தோன்றுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கடவுளாக கில் தான் வருவார் என்று தோன்றுகிறது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். கில் கோலியை போல் அண்டர் 19 கிரிக்கெட்டில் சாதித்து தான் சீனியர் அணிக்கு கில் திரும்பி இருக்கிறார்.
நடப்பாண்டில் மட்டும் 2000 சர்வதேச ரன்களை கில் அடித்துள்ளார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 101 என்ற அளவில் இருக்கிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் கில்லுக்கு தான் உள்ளது.
கில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஏழு சதம், ஒன்பது அரைசதம் அடித்திருக்கிறார். நடப்பாண்டில் மட்டும் கில் ஒரு இரட்டை சதம் உட்பட ஐந்து சதம் அடித்து 2023 ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |