ஐபிஎல் தொடரில் நிகழ்த்தப்பட்ட வரலாற்று சாதனை.. 10 பந்தில் 4 விக்கெட்!

தனது முதல் இரண்டு ஓவர்களில் 4 விக்கெட்களை சாய்த்ததுடன், தனது முதல் ஓவரில் ஃபாஃப் டு ப்ளேசிஸ் மற்றும் ரஜத் படிதார் விக்கெட்களை சாய்த்தார்.

ஐபிஎல் தொடரில் நிகழ்த்தப்பட்ட வரலாற்று சாதனை.. 10 பந்தில் 4 விக்கெட்!

10 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை படைத்தார்.

தனது முதல் இரண்டு ஓவர்களில் 4 விக்கெட்களை சாய்த்ததுடன், தனது முதல் ஓவரில் ஃபாஃப் டு ப்ளேசிஸ் மற்றும் ரஜத் படிதார் விக்கெட்களை சாய்த்தார்.

இரண்டாவது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் விராட் கோலி மற்றும் கேமரான் கிரீன் விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் 10 பந்துகளில் 4 விக்கெட்களை சாய்த்து உள்ளார்.

சிறப்பாக பந்து வீசிய ரஹ்மான் தனது முதல் 3 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், தனது கடைசி ஓவரில் 16 ரன்கள் கொடுத்தார். இதுவே ஐபிஎல் தொடரில் வங்கதேச பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகும். 

முன்னதாக ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதை முறியடித்த முஸ்தாபிசூர் ரஹ்மான் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் சாய்த்தார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...