4ஆவது டெஸ்டில் சாதனை படைக்க வாய்ப்பு.. வெறும் 60 ரன்கள் தான் தேவை... சாதிப்பாரா ராகுல்?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும்  நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார். 

4ஆவது டெஸ்டில் சாதனை படைக்க வாய்ப்பு.. வெறும் 60 ரன்கள் தான் தேவை... சாதிப்பாரா ராகுல்?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும்  நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார். 

நடப்பு தொடரில் 6 இன்னிங்ஸில் இரண்டு சதம், ஒரு அரை சதம் அடங்கலாக மொத்தமாக 375 ரன்கள் அடித்துள்ள  ராகுலின் சராசரி 62 என்ற அளவில் இருக்கின்றது. 

அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் எடுத்த தொடக்க வீரர் என்ற பெருமையும் ராகுல் பெற்றிருந்த நிலையில், 31 வயதான ராகுல் 60 ரன்கள் மட்டும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அடித்தால் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார்.

தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 218 போட்டிகளில் விளையாடி 8940 ரன்கள் அடித்து உள்ள அவர், 9 ஆயிரம் ரன்களை தொட இருக்கின்றார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ராகுல் 61 போட்டியில் விளையாடி 3632 ரன்கள் அடித்துள்ளார். இதில் 10 சதம், 18 அரை சதம் அடங்கும். ராகுல் அதிகபட்சமாக 199 ரன்கள் அடித்திருக்கின்றார். 

இதேபோன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி 3043 ரன்கள் அடித்துள்ள ராகுல், ஏழு சதம் 18 அரை சதம் அடித்து உள்ளதுடன், இதற்கு முன்பு சர்வதேச டி20 போட்டிகளில் ராகுல் மொத்தமாக 2265 ரன்கள் அடித்திருக்கின்றார்.

இங்கிலாந்தில் ராகுல் தற்போது வரை 12 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 989 ரன்கள் அடித்து இருக்கின்றார். இதில் நான்கு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். 

நடப்பு தொடரில் ராகுல் மொத்தமாக 670 பந்துகளை எதிர் கொண்டு இருக்கிறார். இதன் மூலம் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே தொடரில் அதிக பந்துகளை இங்கிலாந்து மண்ணில் எதிர்கொண்ட 4வது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமை ராகுலுக்கு கிடைத்திருக்கின்றது.

இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு ராகுலே 735 பந்துகளை எதிர்கொண்டு இருந்தார். அந்த ரெக்கார்டை முறியடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு முரளி விஜய் 1054 பந்துகளையும், ரோகித் சர்மா 2021 ஆம் ஆண்டு தொடரில் 866 பந்துகளையும் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.