கோலி சிக்கினால் ஆப்பு... இந்திய அணிக்கு பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நியூயார்க் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நியூயார்க் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
ஏற்கெனவே பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியுடன் தோல்வியை சந்தித்துள்ளதால், இந்திய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயமான நிலையில் உள்ளது.
இந்திய அணி அயர்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் சிறந்த ரன் ரேட்டுடன் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பேசி உள்ளார்.
விராட் கோலி நம்பர் 3 வரிசையில் பேட்டிங் ஆடும் போது அழுத்தத்தை அவர் எடுத்து கொண்டு போட்டியை முடித்து கொடுப்பார் என்றும், அது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்று நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மோசமான பிட்ச்சில் நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. ஐசிசி வைத்த ஆப்பு!
ஜெய்ஸ்வாலை கொண்டு இந்திய அணி தொடக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அதன்பின் விராட் கோலி நம்பர் 3ல் களமிறங்க வேண்டும் என்றும், ஒருவேளை இந்திய அணி விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கினால், நிச்சயம் சிக்கல் ஏற்படும் என்றும் கூறி உள்ளார்.
இந்திய அணி விராட் கோலி தொடக்க வீரராக களமிறக்கி தவறு செய்வதாக கருதுவதாகவும் இந்திய அணியின் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் எளிதாக விக்கெட்டை கைப்பற்ற கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் குறிபிட்டுள்ளார்.
அத்துடன், ஒரே மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் உள்ளதால் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்களை விளாசி தள்ளிய நிலையில், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் விராட் கோலியை கொண்டு தொடக்கம் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |