IPL 2024 துவங்கும் தேதி இதுதான்... உறுதியாக தெரிவித்த பிசிசிஐ... எந்த நாட்டில் போட்டிகள் தெரியுமா?
IPL 2024 schedule: ஐபிஎல் 17ஆவது சீசன், 2024 மார்ச் 22ஆம் தேதி துவங்கி, மே 26ஆம் தேதிவரை நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
 
                                ஐபிஎல் 17ஆவது சீசன், 2024 மார்ச் 22ஆம் தேதி துவங்கி, மே 26ஆம் தேதிவரை நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், அதனை மனதில் வைத்து, அட்டவணையை உருவாக்கியுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
2009ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அடுத்து, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, சில போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
அப்போ ஹர்திக்... இப்போ பும்ரா... ரோஹித் ஷர்மாவுக்கு குழி பறிக்கும் நண்பர்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
தற்போது, 2024ஆம் ஆண்டிலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படும் எனக் கருதப்பட்டது. ஆனால், போட்டிகள் அனைத்தும் இந்தியாவில்தான் நடைபெறும் என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
முதலில் மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெறும். இப்போட்டிகள் பிப்ரவரி 22ஆம் தேதி முதல், மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடருக்கான போட்டிகள் டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய மைதானங்களில் மட்டும்தான் நடைபெறுமாம். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் 17ஆவது சீசன், மார்ச் 22ஆம் தேதிமுதல் மே 26ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும், இந்த தேதிகளை இன்னும் உறுதிசெய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகுதான், ஐபிஎல் அட்டவணை உறுதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேட்டிகொடுத்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ''ஐபிஎல் 17ஆவது சீசன் முடிந்த பிறகு, அடுத்த ஐந்து நாட்களில் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது.
திடீரென்று இந்திய அணியிலிருந்து விலகிய கோலி.. இதுதான் காரணமா? நடந்தது என்ன?
இதனால், பிளே ஆப் சுற்றுகளில் சில முக்கிய வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். இந்த பிரச்சினையை தீர்க்க, அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பைனல் வரை, அனைத்து வீரர்களும் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






