சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு தடை? அதை செய்யாவிட்டால் விளையாட முடியாதாம்!

இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் மட்டும், போட்டிகள் இலங்கை அல்லது அமீரகத்தில் நடத்தப்படாது. 

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு தடை? அதை செய்யாவிட்டால் விளையாட முடியாதாம்!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தகுதிபெறும் என்றும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.

குரூப் ஏ பிரிவில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன. இவர்களுடன் வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளது. இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள், தரவரிசையில் முதல் 8 இடங்களில் இல்லை என்பதால், இத்தொடரில் இடம்பெற முடியவில்லை.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தானுக்கு சென்ற ஐசிசி சேர்மன் கிறிஸ் டெட்லி, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் மோக்‌ஷின் நக்வியை சந்தித்து, பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி, ஆய்வும் மேற்கொண்டார்.

ஐசிசி சேர்மன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் ஆகியோர் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, 8 அணிகளிடமும் பாதுகாப்பு குறித்து ஐசிசி சேர்மன் விளக்கமாக பேசியிருக்கிறார்.. இதனைத் தொடர்ந்து, 6 அணிகள் பாகிஸ்தான் செல்ல சம்மதம் தெரிவித்துவிட்டது.

பிசிசிஐ மட்டும், பாகிஸ்தான் செல்ல இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை, எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இந்திய அரசிடம் அனுமதி கோரியப் பிறகுதான், முடிவை அறிவிப்போம் என பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எந்த மைதானத்தில் விளையாடும் என்பதை தற்போதே ஐசிசி அறிவித்துவிட்டது. இந்தியா, தான் பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில்தான் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போட்டியும் அங்குதான் நடக்கும்.

லாகூரில் இந்தியா, பாகிஸ்தான் ஆடும் போட்டி, அடுத்தாண்டு மார்ச் 1ஆம் தேதி நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, பிசிசிஐ எப்போது வேண்டுமானாலும் ஆராயலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால்தான், முன்கூட்டியே இந்தியா, பாகிஸ்தான் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை, இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் மட்டும், போட்டிகள் இலங்கை அல்லது அமீரகத்தில் நடத்தப்படாது. 

இந்திய அணியை இத்தொடருக்கு தடை செய்துவிட்டு, தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியை தேர்வுசெய்ய ஐசிசி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...