இத சரி செய்யாம இந்திய அணியால் ஜெயிக்கவே முடியாது.. இர்பான் பதான் அதிரடி பேட்டி
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய அணியால் வெல்ல முடியாமல் இருப்பது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை முதல் தொடரை தவிர நடைபெற்ற ஏனைய டி20 உலகக்கோப்பை தொடரில் ஒருமுறை கூட இந்திய அணி வெல்லவில்லை.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய அணியால் வெல்ல முடியாமல் இருப்பது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்தியா சார்பாக நடத்தப்பட்ட அந்த உலகக்கோப்பை தொடரில், லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. அதன்பின் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்கும் உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கம்பேக் கொடுத்துள்ளதன் மூலம் பிசிசிஐ தனது திட்டங்களை உருவாக்கி வருவது தெரிய வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசும் போது, டி20 போட்டிகளில் தான் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அச்சமின்றி ஆக்ரோஷத்துடன் விளையாட முடியும்.
இந்திய அணியை நினைத்து கவலைப்படுவதற்கு காரணம் பவுலிங் தான். ஏனென்றால் துபாயில் பாகிஸ்தான் அணியுடனான போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி ஆகியவற்றில் தோல்வியடைந்ததற்கு காரணம் பவுலிங் மட்டும் தான்.
பவுலிங்கை பலப்படுத்தாமல் எந்த பெரிய தொடரையும் வெல்ல முடியாது. இந்திய அணிக்கு கண்டிப்பாக 5 விக்கெட் டேக்கிங் பவுலர்கள் இருக்க வேண்டும். அதில் 4 பேர் ஆட்டத்தின் அனைத்து சூழல்களிலும் பந்துவீசும் வல்லமையுடன் இருக்க வேண்டும்.
ஆட்டம் கைகளை விட்டு விலகும் போது, பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் வல்லமையுடன் இருக்க வேண்டும். அப்படியான பவுலர்களை கண்டுபிடித்துவிட்டால் நிச்சயம் உலககக்கோப்பை வெல்ல வெகு நாட்களாகாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து சுனில் கவாஸ்கர் கூறும் போது, இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களின் பணிகள் முக்கியமானது. டாப் 5யில் ஆடும் பேட்ஸ்மேன்கள் சில ஓவர்களை வீச தயாராக இருக்க வேண்டும்.
ஏனென்றால் எந்த போட்டியிலும் ஏதாவது ஒரு பவுலருக்கு மோசமான நாளாக அமைய வாய்ப்புள்ளது. அந்த பவுலரின் சில ஓவர்களை ஆல்ரவுண்டர்களை வைத்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |