இந்திய வீரரின் 36 வருட சாதனையை தகர்த்து மெகா உலக சாதனை!
உலகக் கோப்பை 2023 தொடரின், 15ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய நெதர்லாந்து அணி அபாரமாக செயல்பட்டு 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
உலகக் கோப்பை 2023 தொடரின், 15ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய நெதர்லாந்து அணி அபாரமாக செயல்பட்டு 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
நெதர்லாந்து அணி 2007ஆம் ஆண்டிற்கு பிறகு, அதாவது 16 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த சரித்திர வெற்றிக்கு நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்தான் முக்கிய காரணம்.
கடைசி நேரத்தில் 78* ரன்களை அடித்து ஸ்கோரை உயர்த்தியிருந்தார். அணி கடும் சரிவில் இருந்து, 150 ரன்களை கூட தாண்டாது எனக் கருதப்பட்ட நிலையில், அதிரடியாக 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட, 69 பந்துகளில் 78 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.
இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 7ஆவது இடத்தில் களமிறங்கி, அகிபட்ச ஸ்கோரை பதிவுசெய்த கேப்டன் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
36 வருடங்களுக்கு முன், 1987ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூர் மைதானத்தில் 7ஆவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் கபில் தேவ், 72* (58) ரன்களை அடித்தார். இதனால், அப்போட்டியில் நியூசிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |