இந்தியா உலக கோப்பையை தனதாக்க ரோகித் இதை செய்யனும்.. யுவராஜ் சிங் விடுத்துள்ள எச்சரிக்கை
இந்திய அணி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா நிச்சயமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.
 
                                இந்திய அணி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா நிச்சயமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.
இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்த யுவராஜ் சிங் ஆட்ட நாயன் விருதை வென்றிருக்கிறார். இந்த நிலையில், யுவராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில் ரோகித் சர்மா இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் ஒரு 40 பந்துகளை எதிர்கொண்டால் நிச்சயம் 70 முதல் 80 ரன்கள் குவித்து விடுவார். இதேபோன்று ரோகித் சர்மா 100 பந்துகளை எதிர்கொண்டால் இரட்டை சதம் அடிக்ககூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அத்துடன், ரோகித் சர்மா ஒரு அணியின் வீரராக திகழ்கிறார். அணிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ரோகித் சர்மாவுக்கு அணி தான் முதலில் வருகிறது இதனால் தான் அவர் ஒரு கேப்டனாக வெற்றிகரமாக திகழ்கிறார். மேலும் ரோகித் சர்மா நெருக்கடியான கட்டத்தில் ஒரு நல்ல கேப்டனாக திகழ்கிறார். அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் நிறைய அனுபவங்களையும் பெற்றிருக்கிறார்.
 
            
இந்த தொடர் முழுவதும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு காரணம் நாம் எந்த ஒரு மிகப்பெரிய தவறையும் இந்த தொடரில் செய்யவில்லை. இதே போல் இறுதி ஆட்டத்திலும் இந்திய அணி எந்த ஒரு தவறையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய வாய்ப்பு இருக்கிறது. நாளை எந்த ஒரு துரதிர்ஷ்ட சம்பவம் நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்.
ஆனால் பிரச்சனையே இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது என்பதுதான். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எப்படி அழுத்தத்தை கையாள வேண்டும் என்று நன்றாக தெரியும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






