கோலி கூட செய்யாத செயல்... போட்டி முடிந்ததும் கில் செய்த செயல்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்து உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்து உள்ளது.
இந்திய அணியில் புதிய கேப்டனாக களமிறங்கிய கில் ஒரு இரட்டை சதமும் அடங்கலாக நான்கு சதம் அடித்திருந்தார். மொத்தமாக 754 ரன்கள் விளாசி இருந்தார்.
இந்த நிலையில் போட்டி முடிவடைந்தவுடன் கில் செய்த ஒரு காரியம்தான் தற்பொழுது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கின்றது. பொதுவாக ஒரு அணி வெற்றி பெற்றால் அந்த அணியின் கேப்டன் ஒரு சிலர் வீரர்களை பாராட்டுவார்.
மேலும் தாம் அதிக ரன்கள் அடித்ததால் தான் அணி வெற்றி பெற்றது என்ற ஒரு மிதப்பில் இருப்பார். ஆனால் கில் எதையும் செய்யவில்லை. தனி ஒரு வீரரால் அணி வென்றது என்ற கோட்பாட்டை உடைக்கும் வகையில் ஒரு காரியத்தை செய்திருக்கின்றார்.
அதாவது, தன்னுடைய ஜெர்சியை இந்திய அணி வீரர்களிட்ம் கொடுத்து அதில் அனைவரின் ஆட்டோகிராபமும் வாங்கி இருக்கின்றார்.
இதனை பத்திரமாக வைக்கப் போவதாக அவர்களிடம் தெரிவித்துள்ள கில், இதனை சமூக வலைத்தளத்தில் புகைப்படம் எடுத்து இது சிறந்த அணி என்று பாராட்டியுள்ளார்.
கில்லின் ஜெர்சியில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவரின் கையெழுத்தமும் இருந்தது. இதன் மூலம் ஒருங்கிணைந்து அணி செயல்பட்டதால் தான் வெற்றியை நாம் பெற்றோம் என்ற கருத்தை ஆழமாக கில் பதிய வைத்திருக்கின்றார்.
இதற்கு முன்பு உள்ள கேப்டன்கள் தங்களுடைய ஜெர்சியை கையெழுத்து வாங்கி எதிரணிக்கு தான் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.ஆனால் நீங்கள் தான் எனக்கான பரிசு. உங்களுடைய பங்களிப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம் என்பதை வீரர்களிடையே தெரியப்படுத்தி விட்டார்.