இந்திய கிரிக்கெட் சரித்திரத்தை 18 வருடத்திற்கு முன் தோனி மாற்றிய நாள்.. மறக்கவே முடியாது
அதன் பின் ஆறு மாதங்களாக அவர் சரியாக செயல்படவில்லை. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டதும் அதற்கு முக்கிய காரணம். அந்த ஆறு மாதங்களில் 16 போட்டிகளில் இரண்டு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார்.
தோனி இந்திய அணியில் 2004 டிசம்பரில் இடம் பெற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சில போட்டிகளில் ஆடத் துவங்கி இருந்தார். மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக அவரை மாற்றிய உடன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் 148 ரன்கள் குவித்து தன் முதல் சதத்தை அடித்து அணியில் தன் இடத்தையும் நிலை நாட்டி இருந்தார்.
ஆனால், அதன் பின் ஆறு மாதங்களாக அவர் சரியாக செயல்படவில்லை. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டதும் அதற்கு முக்கிய காரணம். அந்த ஆறு மாதங்களில் 16 போட்டிகளில் இரண்டு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார்.
அப்படியான சூழ்நிலையில் அக்டோபர் 31, 2005 அன்று இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவரை மூன்றாம் வரிசையில் களமிறக்கி பரிசோதனை செய்தார் அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட். அந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 298 ரன்கள் குவித்து இருந்தது.
இப்போது போல இலங்கை அணி அப்போது சுமாரான அணி எல்லாம் இல்லை. குமார் சங்ககாரா, மகிளா ஜெயவர்தனே, சனத் ஜெயசூர்யா, திலகரத்னே தில்ஷன், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன் என தரமான, அனுபவ வீரர்கள் அணியில் இருந்தனர். இந்த சூழ்நிலையில், இலங்கை அணி நிர்ணயித்த 299 வெற்றி இலக்கை இந்தியா எட்டுவது கடினம் என கருதப்பட்டது.
அதற்கேற்ப துவக்க வீரர் சச்சின் முதல் ஓவரிலேயே 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது மூன்றாம் வரிசையில் தோனி களமிறங்கினார். சேவாக் என்ற அதிரடி பேட்ஸ்மேன் களத்தில் நிற்கும் போது அவரே மிரண்டு போகும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடினார் தோனி.
ஒரு பக்கம் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் மற்ற இந்திய வீரர்கள் விக்கெட்களை இழந்தாலும், தோனி கடைசி வரை நின்று 145 பந்துகளில் 183 ரன்கள் குவித்து சேஸிங்கை 46.1 ஓவரில் வெற்றிகரமாக முடித்தார்.
அன்று தோனி ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டை சதத்தை அடித்து விடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி ஒரு அதிசயம் மட்டும் அன்று நடக்காமல் போனது. ஆனால், இதுவே தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடித்த மிகப் பெரிய ஸ்கோர் ஆகும்.
இன்று ஒரு போட்டியில் 10 சிக்ஸ் அடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆனால், அன்று டி20 எல்லாம் இல்லாத காலத்தில் தோனி ஒரே ஒருநாள் இன்னிங்க்ஸில் 10 சிக்ஸர் அடித்து கிரிக்கெட் உலகை மிரள வைத்தார்.
அதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த சதத்தை காட்டிலும், இந்த 183 ரன்கள் தோனி என்ற பெயரை இந்தியாவின் பட்டி, தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது. அன்றுதான் தோனியின் சகாப்தம் தொடங்கியது என்றும் சொல்லலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |