வரலாற்று தோல்வியடைந்த குஜராத் அணி.. சிஎஸ்கே மெகா வெற்றி!

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில், சாய் சுதர்ஷன் 37 (31), சாஹா 21 (17), டேவிட் மில்லர் 21 (16) மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். 

வரலாற்று தோல்வியடைந்த குஜராத் அணி.. சிஎஸ்கே மெகா வெற்றி!

நடப்பு ஐபிஎல் சீசனின் 7ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நேற்று முன்தினம் எப்படி, முதல் ஓவரில் கோலி கேட்சை பேர்ஸ்டோ பிடிக்காமல் விட்டாரோ, அதேபோல் ருதுராஜ் அடித்த கேட்சை ஸ்லிப் பீல்டர் சாய் கிஷோர் பிடிக்கவில்லை.

சிஎஸ்கே ஓபனர்கள் ருதுராஜ், ராசின் ரவீந்திரா இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாட ஆரம்பித்தார்கள். குறிப்பாக, ரவீந்திராவின் அதிரடியை, குஜராத் அணியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, பவர் பிளே முடிந்த உடனே, வீந்திரா 46 (20) விக்கெட்டை ரஷித் கான் எடுத்துக் கொடுக்க, அடுத்து ரஹானே 12 (12) பவுண்டரி எதுவும் அடிக்காமல் நடையைக் கட்டினார். தொடர்ந்து, ருதுராஜும் 46 (36) அவுட் ஆனார்.

மூன்று விக்கெட்கள் விழுந்தப் பிறகு களத்திற்குள் வந்த ஷிவம் துபே, சாய் கிஷோரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். தொடர்ந்து, ஸ்பின்னர்களுக்கு எதிராக மிரட்டலாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்.

ஷிவம் துபே, இப்போட்டியில் 5 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஐபிஎல் 2023-ல் இருந்து தற்போதுவரை, 40 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். ஹென்ட்ரி கிளாசின் (38), ஷுப்மன் கில் (36) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இறுதியில், துபே 51 (23) ஆட்டமிழந்தப் பிறகு, இளம் விக்கெட் கீப்பர் பேட்டர், குட்டி தோனி எனக் கருதப்படும் ஷமிர் ரிஷ்வி அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்து 14 (6) ஆட்டமிழந்தார். இதனால், சிஎஸ்கேர 205/5 ரன்களை குவித்தது. மிட்செல் 24 (20), ஜடேஜா 6 (2) களத்தில் இருந்தார்கள்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில், சாய் சுதர்ஷன் 37 (31), சாஹா 21 (17), டேவிட் மில்லர் 21 (16) மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். 

மற்றவர்கள் படுமோசமாக சொதப்பியதால், குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 143/8 ரன்களை மட்டும் அடித்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமாக சொதப்பியது. குஜராத் அணிக்கு இதுதான் மிகப்பெரிய தோல்வியாக காணப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...