புது வருடத்தில் காத்திருக்கும் சவால்? நெருக்கடிகளை சமாளிக்குமா இந்திய அணி?
கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை. இந்த தொடர் தான் 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுடன், இந்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை. இந்த தொடர் தான் 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.
இந்த டி20 உலக கோப்பையாவது இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு முன் வெறும் மூன்று டி20 போட்டிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
ரோகித் சர்மா ஓய்வு... இந்திய அணியில் நடக்க போகும் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா?
மற்றபடி ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் அதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களை தேர்வு செய்து ஒரு அணியாக விளையாட வைக்க வேண்டும்.
டி20 உலககோப்பைக்கு முன் பல டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒரு அணியாக பங்கேற்று இருக்க வேண்டும் என்ற நிலையில், இது இந்தியாவுக்கு பெரிய மைனஸாக கூறப்படுகின்றது.
தவிர நடப்பாண்டில் இந்திய அணி 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக தகுதி பெற முடியும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஜனவரி இறுதியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள், வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் ஆகிய தொடரில் இந்தியா முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருப்பதால் ஹாட்ரிக் சாதனையை இந்தியா படைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
நடப்பாண்டில் இந்தியா இலங்கைக்கு எதிராக மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தான் விளையாடவுள்ளது.
இது இவ்வாறு இருக்கும் நிலையில், தற்போது இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் யாரும் தங்களது திறமையை வெளிப்படுத்தாமல் இருப்பது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக காணப்படுகின்றது.
இதனால் இந்த வருடத்தில் சிறந்த டெஸ்ட் அணியை உருவாக்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |