48 வருட உலககோப்பை வரலாற்றில் முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா படைத்த மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தொடர்ந்து இந்த தொடரிலும் இலங்கை அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 

48 வருட உலககோப்பை வரலாற்றில் முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா படைத்த மாபெரும் சாதனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 33வது லீக் போட்டியானதுமும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிகள் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். 
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பாக சுப்மன் கில் (92), விராட் கோலி (88), ஷ்ரேயாஸ் ஐயர் (82) ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

இருப்பினும் இந்திய அணி துவக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடி இலங்கை அணிக்கு பெரிய தொந்தரவை அளித்தது. பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தொடர்ந்து இந்த தொடரிலும் இலங்கை அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 

முதல் 10 ஓவர்களின் முடிவில் இலங்கை அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 14 ரன்களை மட்டுமே குவித்து மோசமான ஆரம்பத்தை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இதுவரை உலக கோப்பை வரலாற்றில் எந்த ஒரு இந்திய பந்துவீச்சாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்த போட்டியின் போது பந்துவீச ஆரம்பிக்கையில் தான் வீசிய முதல் பந்திலேயே பதும் நிசங்காவை எல்.பி முறையில் ஆட்டமிழக்க வைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா உலகக் கோப்பை இன்னிங்சின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 

43 ஆண்டு கால ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இப்படி முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...