தமிழக வீரருக்கு நெருக்கடி... குறி வைக்கப்பட்ட அஸ்வின்.. பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் இதுவா?
சிஎஸ்கே அணி அஸ்வினை தொடர்ந்து பவர் பிளேவில் பயன்படுத்தியதால் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் 9 கோடி 75 லட்சம் ரூபாய் கொடுத்து, தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை வாங்கியது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வின் 2015 ஆம் ஆண்டு வரை அந்த அணியிலே தொடர்ந்தார்.
பின்னர் வேறு அணிக்கு சென்ற அஸ்வின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பியிருந்தார். அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை சிஎஸ்கே அணியில் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அத்துடன், அஸ்வின் பேட்டிங்கும் அபாரமாக இருந்ததால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அஸ்வினை தொடர்ந்து பவர் பிளேவில் பயன்படுத்தியதால் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இந்த சீசனில் வெறும் 5 விக்கெட் மட்டும்தான் அஸ்வின் வீழ்த்தி இருந்தார். பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸில் விளையாடி மொத்தமாகவே 12 ரன்கள் சேர்த்து இருந்தார். இதனால் அஸ்வின் சில ஆட்டங்களில் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் அஸ்வினுக்கு தேவையில்லாத நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தொடர்ந்து பவர் பிளேவில் வீசியது தவறு என்பது போல் சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனியும் கூறியிருந்தார்.
இதற்கு காரணம் பயிற்சியாளர் பிளமிங் தான் என்று கூறப்படுகிறது. அஸ்வின் தனது யுடியுப் சேனலில் அவர்களுடைய நண்பர்கள் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங்கை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டனர்.
இந்த சூழலில் அஸ்வின் நண்பர்கள் வெளியிட்ட வீடியோ தான் அவருடைய இடம் பறிபோனதற்கு காரணமாகிவிட்டது என்று கூறப்படுகிறது.
மேலும் கடந்த காலங்களில் செயல்பாடு குறித்து அஸ்வின் விமர்சித்து இருந்ததால் அவரை பழிவாங்கும் விதமாக பிளமிங் செயல்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தோனியே அஸ்வினை சேர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும், அதற்கு பிளெமிங் தடை போட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.