மருத்துவமனையில் சுனைனா.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மருத்துவமனையில் சுனைனா.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான Kumar Vs Kumari என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சுனைனா. அதன் பிறகு சம்திங் ஸ்பெஷல், 10th க்ளாஸ், மிஸ்ஸிங் ஆகிய படங்களில் நடித்தார். 

தெலுங்கில் நடித்த படங்கள் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்று சுனைனா மீது வெளிச்சத்தை பாய்ச்சியது. மேலும் அவரது அழகும் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.

நடித்துக்கொண்டிருந்தபோதே காவ்யா படத்தின் மூலம் 2006ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கங்கா என்ற படத்தின் மூலம் 2008ஆம் ஆண்டு கன்னடத்தில் காலடி எடுத்துவைத்தார். 


நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே வேற்று மொழிகளில் நடிக்க ஆரம்பித்த அவரை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

இந்த சூழலில் கன்னடத்தில் அறிமுகமான அதே ஆண்டு தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார். நகுலும் அந்தப் படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானார். 

சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜய் ஆண்டனி இசையில் உருவான பாடல்கள் அனைத்துமே படத்துக்கு அடையாளமாக மாறின. முக்கியமாக சுனைனாவின் அழகு தமிழ் ரசிகரக்ளையும் கவர்ந்தது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தனக்கு கிடைத்த முக்கியத்துவத்தைவிடவும் தமிழில் முக்கியத்துவம் கிடைத்ததை உணர்ந்துகொண்ட சுனைனா தொடர்ந்து தமிழில் கவனத்தை திருப்பினார். அந்தவகையில் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அவர் நடித்த தமிழ் படங்களில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான நீர்ப்பறவை படத்தில் எஸ்தர் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். 

அந்தப் படத்திலிருந்து சுனைனா வெறும் அழகான நடிகை மட்டுமில்லை திறமையான நடிகை என்ற பெயரையும் பெற்றார். அதேபோல் சில்லுக்கருப்பட்டி படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சுனைனா.

அவரது நடிப்பில் கடைசியாக ரெஜினா படம் வெளியானது. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்படி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். 

அப்புகைப்படத்தோடு எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் விரைவில் மீண்டும் பலமாக வருவேன் என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுனைனாவுக்கு என்ன ஆனது என்று கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...