அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த கோலி.. டெஸ்ட் அணியில் இருந்தே விலகல்?... அதிர்ச்சியில் பிசிசிஐ!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் இரண்டு போட்டிகளில் நிறவைடைந்துள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் இரண்டு போட்டிகளில் நிறவைடைந்துள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் இடம்பெற்ற விராட் கோலி தொடருக்கு முன் நடந்த பயிற்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், முதல் நாள் பயிற்சி முடிந்தவுடன் தன் குடும்பத்தினரை சந்திக்க சென்று விட்டார்.
அதன்பின்னர், விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ கூறி இருந்தது. இந்த நிலையில், விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் 1 - 1 என சமநிலையில் இருப்பதால் கோலியின் வருகை இந்திய அணிக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என கருதிய நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் விராட் கோலி.
அதாவது, விராட் கோலி குறைந்த பட்சம் நான்காவது டெஸ்ட் போட்டி முடியும் வரை அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதுவும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
விராட் கோலி தன் குடும்பத்தினருக்கான இந்த முடிவை எடுத்துள்ள நிலையில் உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன கோலி இல்லாதது இந்திய டெஸ்ட் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.
கோலி இல்லாத நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விலகி இருந்த கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், இரண்டாவது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முகமது சிராஜ், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இணைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |