2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி இருக்கமாட்டார்கள் - கவாஸ்கர் அதிரடி!

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.

2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி இருக்கமாட்டார்கள் - கவாஸ்கர் அதிரடி!

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.

2024 உலகக் கோப்பையை வென்றபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வை அறிவித்த  நிலையில்,  டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருப்பதால், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடுவார்கள்.

2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு  டி20 உலகக் கோப்பையிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் இருவரும் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

இருப்பினும், 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா என்பது தெரியவில்லை. இந்த நிலையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், கோலியின் எதிர்காலம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசி இருக்கின்றார்.

“ஒருநாள் போட்டிகளில் அவர்கள் மிகப்பெரிய வீரர்களாக இருந்திருக்கின்றனர். இருப்பினும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர்கள் இடம்பெற முடியுமா எனத் தேர்வுக்குழுவுக்கே தெரியும்.

அதற்கேற்றவாறு இவர்கள் ஃபெர்பாமென்ஸ் செய்தால், அவர்களால் முடியும் என்று தேர்வுக்குழு நினைத்தால், அவர்கள் இடம்பெறுவார்கள். ஆனால் நேர்மையாகச் சொல்கிறேன், அவர்கள் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. 

இருப்பினும், அடுத்த ஒரு வருடத்தில் நல்ல ஃபார்மில் தொடர்ந்து சதங்கள் அடித்தால், கடவுளால் கூட அவர்களை அணியிலிருந்து கழற்றிவிட முடியாது." என்று கூறினார்.