இறுதி போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..  ஆஸ்திரேலிய ஜாம்பவான் வெளியிட்ட தகவல்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு  உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இரண்டு அணிகளும் கடந்த 2003 ஆம் ஆண்டு மோதிய போது ஆஸ்திரேலியா அணி வெற்றியை தட்டிச் சென்றது.

Nov 17, 2023 - 23:29
Nov 17, 2023 - 23:38
இறுதி போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..  ஆஸ்திரேலிய ஜாம்பவான் வெளியிட்ட தகவல்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு  உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இரண்டு அணிகளும் கடந்த 2003 ஆம் ஆண்டு மோதிய போது ஆஸ்திரேலியா அணி வெற்றியை தட்டிச் சென்றது.

இதற்கு பழி தீர்க்கும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் இம்முறை நடைபெறவுள்ள ஆட்டத்தில் களமிறங்குகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில்,  இறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள் என்பது தொடர்பில், ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பெவன் கருத்து தெரிவித்திருக்கிறார். 

உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதை தான் எப்போதும் மிகப்பெரிய சாதனையாக கருதுவதாக தெரிவித்துள்ள அவர், இது போன்ற ஒரு நிகழ்வு எப்போதும் நடைபெறுவது இல்லை என்றும், நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இரண்டு பெரிய அணிகள் மோதுகிறார்கள் என்றும் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருப்பதுடன், ஒரு போட்டியில் ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே, தன்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி இன்னும் தங்களுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தற்போதைய நிலைமையை பொறுத்தவரை உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பை வெல்லும் திறமை இருப்பதால், இந்த தொடரில் யார் டாஸ் வெல்கிறார்களோ அவர்கள் பேட்டிங் செய்வார்கள் என்றும், ஆஸ்திரேலியா அணியும் பேட்டிங் செய்யக்கூடிய அணி தான். இந்த தொடரில் அவர்கள் முதலில் தோல்வியை தழுவினாலும், பிறகு தரமான ஒரு கம்பேக்கை கொடுத்திருக்கிறார்கள் என்று மைக்கேல் பெவன் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!