இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் பயிற்சியாளர் கம்பீர் அதிரடி கருத்து

இந்திய அணி இனி பாகிஸ்தானுடன் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்து உள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் பயிற்சியாளர் கம்பீர் அதிரடி கருத்து

இந்தியா,பாகிஸ்தான்  ஆகிய இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களின் மட்டும்தான் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இதன்காரணமாக, இந்திய அணி இனி பாகிஸ்தானுடன் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்து உள்ளார்.

“பாகிஸ்தான் தங்களுடைய தவறை நிறுத்தும் வரை இரு நாடுகளுக்கும் இடையே எந்தவித கிரிக்கெட் போட்டியும் நடக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய சொந்த விருப்பம். ஆனால் இது எல்லாம் இந்திய அரசின் முடிவு. 

பாகிஸ்தான் உடன் விளையாடுவதா இல்லையா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை விட, பாலிவுட் சினிமாவை விட எனக்கு இந்திய மக்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தான் மிகவும் முக்கியம். 

கிரிக்கெட் போட்டிகள், சினிமா என அவை அனைத்தும் நாம் விரும்பும் ஒருவரின் உயிர் போவதற்கு சமம் ஆகாது. எனினும் இது அனைத்தும் என்னுடைய முடிவு கிடையாது. பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும். அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்.” என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளதுடன், இந்த தொடரில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடக்கூடாது என்று தற்போது பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.