திடீரென்று சைவத்துக்கு மாறிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. ஆனால் ஒருவரை தவிர!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது உணவு விடயத்தில் பல தியாகங்களை செய்து உடல் தகுதியை பாதுகாக்கிறார்கள்.

திடீரென்று சைவத்துக்கு மாறிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. ஆனால் ஒருவரை தவிர!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது உணவு விடயத்தில் பல தியாகங்களை செய்து உடல் தகுதியை பாதுகாக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் பலர் நெட்பிளிக்சில் ஒளிபரப்பான கேம் சேஞ்சர் என்ற ஒரு டாக்குமெண்டரியை பார்த்து அசைவ சாப்பாட்டில் இருந்து சைவத்திற்கு மாறி உள்ளனராம்.

அந்த டாக்குமெண்டரியில் பல சர்ச்சைகள் இருந்தாலும், இந்திய அணி வீரர்கள் சைவம் சாப்பிட்டால் தான் உடல் தகுதியை நிலைநாட்ட முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பாதியிலே அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய கிரிக்கெட் வீரர்களில் முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி. 

அசைவம் என்றால் கோலிக்கு மிகவும் பிடிக்குமாம். ஆட்டுக்கால் இறைச்சி, பட்டர் சிக்கனையும் விராட் கோலி சாப்பிடுவார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் முழு சைவமாக மாறி இருக்கிறார்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆரம்ப காலத்தில் அசைவ உணவை கொஞ்சம் எடுத்துக் கொண்டாலும் தற்போது முழு சைவமாக தான் இருக்கிறார். 

ஷிகர் தவான் அசைவ உணவை சாப்பிட்டு தான் வளர்ந்திருக்கிறார். ஆனால் தற்போது முழுமையாக சைவத்திற்கு மாறி இருக்கிறார்.

இதேபோன்று ஹர்திக் பாண்டியாவும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்காக முழு சைவமாக கடந்த சில ஆண்டுகள் மாறியிருக்கிறார். 

இதேபோன்று இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் சாஹலும் அசைவ பிரியராக இருந்திருக்கிறார். ஆனால் 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு முழு சைவமாக மாறிவிட்டதாக அவரும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அசைவத்தில் இருந்து சைவம் சாப்பிட்டதால் தான் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் காயம் ஏற்படுவதாகவும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. 
ஆனால் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நம் உடலை எப்படி பாதுகாக்கிறோம் என்பதில் தான் ஒரு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இருக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தோனி ஆரம்பகாலத்தில் இருந்து இப்போது வரை அசைவ உணவை தான் விரும்பி சாப்பிடுகிறார் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...