கொழும்பில் உள்ள வீட்டற்ற மக்களுக்கு மகிச்சித் தகவல்.. வருகிறது வீட்டுத்திட்டம்!

2024 ஆம் வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கொழும்பில் உள்ள வீட்டற்ற மக்களுக்கு மகிச்சித் தகவல்.. வருகிறது வீட்டுத்திட்டம்!

கொழும்பில் உள்ள சிறு மற்றும் நடுத்தர மக்களுக்காக 5 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கான பேச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடந்து கூறுகையில், சிறு மற்றும் மத்திய தர வருமானம் ஈட்டும் மக்களுக்காக கொழும்பில் 05 வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அதற்காக மொத்தமாக 350 டொலர் மில்லியன்கள் செலவாகும். ஜனாதிபதியின் அண்மைய சீனாவிற்காக விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிடைத்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...