2024 ஆம் ஆண்டு டி20 உலககோப்பையை இந்த அணி தான் வெல்லும்... யுவராஜ், கம்பீர் கணிப்பு!
2021 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டியில் வந்து இந்தியா தோல்வியை தழுவியது.
 
                                2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
2021 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டியில் வந்து இந்தியா தோல்வியை தழுவியது.
இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை தான் இந்திய அணி வென்றது. இந்த நிலையில் இதனால் அடுத்த டி20 உலக கோப்பையையாவது இந்தியா வெல்லுமா என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் மற்றும் கம்பீர ஆகியோர் கணித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வீடியோவில் பேசிய யுவராஜ் சிங், எனக்கு டி20 உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்பது குறித்து வேறுபட்ட கருத்து தான் இருக்கிறது. ஆனால் ஏதேனும் ஒரு அணியை சொல்ல வேண்டும் என்றால் நான் தென்னாப்பிரிக்கா வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இதுவரை அவர்கள் ஒரு நாள் மற்றும் டி20 யில் எந்த பெரிய தொடரையும் வென்றதில்லை ஆனால் கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சியை நான் கண்ணால் பார்த்தேன். இதே போல் இன்னொரு அணி என்றால் அது பாகிஸ்தான் தான். பாகிஸ்தான் மற்ற அணிகளுக்கு கடும் போராட்டத்தை கொடுக்கும் என்று யுவராஜ் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய கௌதம் கம்பீர், இந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு பெரிய எதிர்ப்பை கொடுக்கும் அணியாக ஆப்கானிஸ்தான் விளங்கும் என்று கூறினார். ஆடுகளம் தோய்வாக இருப்பதால் ஆப்கானிஸ்தான் அணியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் கம்பீர் சுட்டி காட்டினார்.
இதேபோன்று போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்து அணிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள கம்பீர் இவ்விரு அணிகளும் டி20 கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமோ அப்படி விளையாடுகிறார்கள் என்றும் பாராட்டினார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






