கேப்டன் பதவியை இவருக்கு கொடுங்க... அஸ்வின் ஓபன் டாக்... ஆனால் ஏற்பட்டுள்ள சிக்கல்..
இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு உள்ளது.
 
                                இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, முன்னதாக திடீரென்று ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்து ஷாக் கொடுத்துள்ளனர்.
அத்துடன், இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுடன், ஜஸ்பரீத் பும்ரா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் என ஏகப்பட்ட கேப்டன்ஸி ஆப்ஷன் இருக்கிறது.
இதில், சீனியர் பும்ராதான் என்றாலும், அதிக வேலைப்பளு காரணமாக அவருக்கு கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பில்லை என்றும், ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஸ்வின், யாருக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேசியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அனுபவமிக்க வீரர் இல்லாத இந்திய அணி, கடுமையாக போராட வேண்டி ஏற்படும். ரோஹித், கோலி இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை எனக் கூறினார்.
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில், சீனியர் பும்ராவுக்குதான் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரோஹித் இல்லாதபோது, இந்திய அணியை பும்ரா சிறப்பாக வழிநடத்தினார்.
எனினும், பிசிசிஐ தேர்வுகுழு எடுப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும். எதிர்கால இந்திய அணியை கருத்தில் கொண்டு அவர்கள் முடிவுகளை எடுப்பார்கள் எனக் கருதுகிறேன் என்றார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






